திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் திடீர் ரத்து! தேவஸ்தான அதிகாரி விளக்கம்.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கபடுகிறது. கோடை காலம் முழுவதும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது. 

வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர் வழங்கப்படுகிறது. மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாராயணகிரி, மாட வீதிகள் போன்ற பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனுமன் ஜெயந்தி உற்சவம் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. 

பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 10 லட்சத்து 116 கோவிந்த நாமங்களை பக்தியுடன் எழுதி க் கொண்டு வந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விஐபி தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. 

வருகின்ற 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். மேலும் 22ஆம் தேதி தரிகோண்டா வெங்கமாம்பாள், ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுவாமி தரிசனத்திற்கு 12 மணி நேரமானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupathi Devasthanam halt VIP darshan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->