பத்தே நிமிடத்தில் சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்! தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் அஜித்குமார், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விஸ்வாசம் " படத்தில் கைகோர்த்துள்ளார். 

இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளது. பாடலை LahariMusic  வெளியிடுகிறது. 

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு என பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அஜித் ரசிகர்கள் ட்விட்டரில்  #AdchiThooku & #Viswasam1stSingle என்ற டேகை 10 நிமிடத்தில் இந்திய அளவில் முதல் இடத்தில் டிரெண்டிங் ஆக்கினர்.  



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viswasam AdchiThooku Trending Number 1 in Tweeter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->