சாதனை மேல் சாதனை படைக்கும் விஸ்வாசம்.! எந்த படமும் செய்யாத சாதனை.!! தெறிக்கவிட்ட ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


அல்ட்டிமேட் ஸ்டார் அஜித்குமார் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் 4 ஆவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் விஸ்வாசம். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.   

இப்படத்திற்கு முதன்முறையாக டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் விஸ்வாசம் திரையிடப்படுகிறது. இதனிடையே, விஸ்வாசம் படம் சென்சார் செய்யப்பட்டு, U சான்றிதழ் பெற்றுள்ளது.  இந்த படம், முழு குடும்பத்துக்கான பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கதையை கொண்ட படமாகும். 

இந்நிலையில்,  விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் இன்று டிசம்பர் 30 - பிற்பகல் 01.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் இணையதளங்களில் பயங்கர வேகத்துடன் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ட்ரைலர் வெளியாகும் கடைசி நேரத்தில் 5 நொடிகள் சத்திய ஜோதி பிலிம்ஸ் ட்விட்டர் பக்கம் முடங்கியது. பின்னர் ட்ரைலர் வெளியானது. 




வெளியான சில மணித்துளிகளில் இணையத்தில் வைரலாக தொடங்கிய ட்ரைலர் தற்போது வரை 5 மில்லியன் வீயூஸ் பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

visvasam trailer trending on YouTube and twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->