10-ம் தேதி முதல்.. "வாத்தி" படத்தின் முதல் பாடல்.! - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் திரைப்படம் 'வாத்தி'. இதில் பிரபல நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்தப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. 

இதற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைபெற்றது. இந்நிலையில், நடிகர் தனுஷ் எழுதிய "வாத்தி" திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும் இப்படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர். 'வாத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaththi movie first audio launch


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->