மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ராட்சத சுறாவின் கதை! "தி மெக்" படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு!! - Seithipunal
Seithipunal


 

ஹாலிவுட்டில் தயாராகியுள்ள ஜேசன் ஸ்டேதம் கதாநாயகனாக நடிக்கும் "தி மெக்" திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதமுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் நடிக்கும் படங்களில் அதிரடி சண்டைக் காட்சிகள் தாறுமாறாக அமைந்து இருக்கும். 

இந்தியாவிலும் ஜேசன் ஸ்டேதம் நடித்துள்ள படங்களுக்கு பலத்த வரவேற்பு உள்ளது. அவர் நடிப்பில் வெளியான ஃப்யூரியஸ் 7, தி மெக்கானிக் ரெசரக்ஷன், தி ஃபேட் ஆப் தி ஃப்யூரியஸ் ஆகிய படங்களுக்கு இந்தியாவில் அமோக வெற்றியை தந்தது.

இந்நிலையில், ஜேசன் ஸ்டேதம் நடிப்பில் (தி மெக்) என்ற ஹாலிவுட் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீவ் அல்டெனின் "மெக்: எ நாவல் ஆஃப் டீப் டெரர்" என்ற நாவலை கதைக்களமாக கொண்டு இப்படம் இயக்கப்பட்டது. 

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பசிபிக் பெருங்கடலை ஆண்டு வந்த "மெக்லோடன்" என்ற வெண்ணிற சுறா மீண்டும் வெளியே வருவதும், அதை எதிர்கொள்ளும் ஜோனாஸ் டெய்லர் என்ற அமெரிக்கக் கடற்படை அதிகாரியின் ஆழ்கடல் சாகசங்களுமே "தி மெக்" படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. அதன் டிரெய்லரை "வார்னர் பிரதர்ஸ்" நிறுவனம் வெளியிட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil trailer release of the meg


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->