தல பக்கம் திரும்பிய ஸ்ரீ ரெட்டி பார்வை.! புகைப்படத்தை வெளியிட்டு என்ன கூறியுள்ளார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சினிமா திரையுலகில் பட வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்து தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பெயர்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.

அதுமட்டுமின்றி ஒருசில நடிகைகளை குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பல குழப்பங்களை செய்தார்.

 இந்நிலையில் அவர் தற்போது சென்னையில் குடியேறி ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அவர் தற்பொழுது அஜித் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவரைக் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் அஜித்தின் படம் பார்க்காமல் நான் தூங்கவே  செல்ல மாட்டேன். அவர்தான்  தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஹீரோ. அவர் சர்ச்சைகளில் இருந்து எப்பொழுதுமே விலகியே இருப்பார். எப்பொழுதும் தன்மையாக பேசக்கூடியவர். சிறந்த குடும்பத் தலைவன். சிறந்த மனிதன். சிறந்த கணவன் , சிறந்த தந்தை. என்னுடன் சேர்த்து பல கோடிக்கணக்கான பெண்களின் மனதை கொள்ளை அடித்தவர். என் தலை உங்கள் காலில் தல என்று பதிவிட்டுள்ளார். 

எப்பொழுதும் ஸ்ரீ ரெட்டி கதாநாயகர்களை குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பி வந்த நிலையில், ஸ்ரீ ரெட்டி அஜித்தை புகழ்ந்து பேசி இருப்பது அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri reddy talk about ajith


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->