காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம்.! இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு.!! வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடபகுதியில் இருக்கும் ஜம்முகாஷ்மீர் பகுதியை கைப்பற்றுவதற்காக தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை எல்லை பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலமாக அந்த பகுதியில் எந்த நேரமும் இந்திய இராணுவத்தினர் விழிப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவந்திபுரா பகுதியில் பாதுகாப்பு படை வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 ம் மேற்பட்ட துணை இராணுவ படையினர் வீர மரணம் அடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனத்தை தெரிவித்து., இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்., இந்தியாவின் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமானது தனது வெளிப்பாடை அறிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து., இனி இந்திய திரையுலகில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் திரைப்பட பணியாளர்கள் மற்றும் நடிகர்கள் இந்திய படங்களில் நடிப்பதற்கு தடை விதித்து அறிவித்துள்ளது. மேலும்., இந்த தடையை மீறி பாகிஸ்தான் நாட்டவரை திரைப்பட பணியில் உபயோகம் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in jammu Kashmir terrorist attack cinema industry pan Pakistan actors and workers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->