தமிழிசைக்கு நாசுக்கா பதிலடி கொடுத்த பா.ஜ.க தலை..!! தணிக்கை துறையில் மெர்சல் படத்திற்கு என்ன நடந்தது..? - Seithipunal
Seithipunal


இப்படி இருக்க, பாஜக இளைஞரணி செயற்குழு உறுப்பினரும், நடன பயிற்சியாளருமான காயத்ரி ரகுராம் ‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், அரசியலையும் பொழுதுபோக்கையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ளாமல், சினிமாவையும் சினிமா வசனங்களையும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்குமாறு தமிழிசைக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது

நடிகர்கள் வசனங்களை எழுதுவதில்லை; அப்படியிருக்க அவர்களை ஏன் பழிக்கணும் என்று ட்விட்டரில் கேட்டுள்ள காயத்ரி, தணிக்கைக்குப் பின்னர்தானே படம் வெளியாகியுள்ளது என்பதையும் மென்ஷன் செய்துள்ளார்

மேலும் விமர்சனங்கள் சினிமாவுக்கும் அரசியலுக்கும் புதிதல்ல; திரைப்படத்தில் ஒரு நடிகர் ஏற்கும் கதாபாத்திரங்கள் உண்மையல்ல;விஜய் நிஜ வாழ்வில் மேஜிக் நிபுணரும் இல்லை; மருத்துவரும் இல்லை;

பொழுதுபோக்கை பொழுதுபோக்காக மட்டுமே உணர வேண்டும்; அதை வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றும் தமிழிசைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தற்போது குஷ்பு கூறியது,

மெர்சல் படத்திற்கு எதிராக பாஜகவினர் கொந்தளிப்பது, அவர்களுக்கு இருக்கும் அச்சத்தையே காட்டுகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

நான் மெர்சலாயிட்டேன். முழுவதும் ஒன் மேன் ஷோ. இந்தத் தீபாவளிக்கு கண்களுக்கு விருந்தாக இருக்கிறார் நடிகர் விஜய்.

ஜிஎஸ்டி,பணமதிப்பு நீக்கம் என பல சமூக பிரச்சனைகளை தைரியமாக, நேரடியாகத் திரையில் பேசியதற்கு பாராட்டுகள்.சிலருக்கு மெர்சலால் பல இரவுகள் தூக்கம் இழக்க நேரிடும் என சவுக்கடி பதிலை கூறியுள்ளார்..

படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் எனச் சொல்வது சுதந்திரத்தை பறிப்பது போல. அது பாஜகவின் அச்சத்தையே காட்டுகிறது என்று குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gayathri and kushbu's opinion about mersal and gayathri against tamilisai opinion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->