தமிழகம் முழுவதும், கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம்! அவதிப்படப்போகும் இல்லத்தரசிகள்! - Seithipunal
Seithipunal


புதிய டிராய் கட்டண விதிகளுக்கு எதிர்த்து, இன்று கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என்று தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாமாம் எனத் அறிவித்தது.

புதிய டிராய் கட்டணம் மாதம் ரூ.130 ஆகும். அதற்கான ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் செலுத்தவேண்டும். புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரையுள்ளது. 

இதனிடையே டிராயின் புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இன்று கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என்று தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today tamil nadu cable tv operators strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->