இளம் கோடீசுவரர் ஆன 19 வயது இந்தியர் : ஒரே வருடத்தில் கிடு கிடுவென வளர்ச்சி! - Seithipunal
Seithipunal


19 வயது இளைஞர் ஒருவர் இணையதள ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டியதால் இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனை சேர்ந்தவர் அக்‌ஷய் ரூபரேலியா. இந்திய வம்சாவளியை சேர்ந்த19 வயதான இவர் பள்ளியில் படித்து வருகிறார்.

தற்போது இந்த இளைஞர் இங்கிலாந்திலுள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். இவர் பள்ளியில் படித்துக் கொண்டே இணையதளத்தின் மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார். அவர் ஒரு ஆண்டில் ரூ.1000 கோடிக்கு வியாபாரம் செய்து அதன் மூலம் 120 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவருடைய ரியல் எஸ்டேட் நிறுவனம் இங்கிலாந்திலுள்ள பெரிய கம்பெனிகளில் 18-வது இடம் வகிக்கிறது. இவர் கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய வியாபாரத்தை துவங்கினார். அதனை தொடங்குவதற்கு அப்போது தன்னுடைய உறவினர்களிடம் ரூ.7 லட்சம் கடனாக பெற்று ஆரம்பித்தார். ஆனால் இவரிடம் தற்போது 12 பேர் வேலை செய்கின்றனர்.

இவருடைய தாய் மற்றும் தந்தையும் காது கேளாதவர்கள். இவருக்கு பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடம் பயில ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இடம் வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் அவர் அதில் சேர்ந்து படிப்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை என்றும் தன்னுடைய வியாபாரத்தை மேலும் வளர்க்க விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An Indian-origin teenager has become one of UK's youngest millionaires


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->