மன்னார்குடி டாக்டர் மனைவி கொலை : இளவரசி உறவினர்களுக்கு கஸ்டடி.., - Seithipunal
Seithipunal

மன்னார்குடி டாக்டர் மனைவி கொலை வழக்கில், இளவரசி உறவினர்களை இரண்டு நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முன்னாள் திமுக எம்எல்ஏ பாலகிருஸ்ணனின் பேரன் டாக்டர் இளஞ்சேகரனுக்கும், சேரன்குளத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 17-ம்தேதி உடலில் காயங்களுடன் திவ்யா இறந்து கிடந்துள்ளார். திவ்யாவை கணவரும் அவரது உறவினர்களும் வரதட்சனைக்காக கொன்றுவிட்டதாக, பெண் வீட்டார் புகார் அளித்தனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து, கோட்டாச்சியர் விசாரனை செய்தார். அதனைத் தொடர்ந்து திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன் மற்றும் மாமியார் ராணி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்த அவர்களை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், விசாரனைக்காக அவர்களை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்று மன்னார்குடி டிஎஸ்பி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நேற்று விசாரனைக்கு வந்த போது, டாக்டர் இளஞ்சேரன் தரப்பிற்கு ஆதரவாக திவாகரனுக்காக ஆஜராகும் வக்கீல்கள் வீரையன் மற்றும் தமிழரசன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். ஆனால், அரசு தரப்பு வக்கீலின் வாதத்தை ஏற்ற நீதிபதி விஜயன், இன்று 27-ந் தேதி மாலை 5 மணி முதல் 29-ந் தேதி மாலை 5 மணி வரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். டாக்டர் இளஞ்சேகரனின் அத்தையை, பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசியின் அண்ணன் வடுகநாதனுக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal



கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->