உக்ரைனில் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக தானியம் ஏற்றுமதி.! நேரில் பார்வையிட்டார் ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனின் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இதனால் தானிய ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதிக்காக உக்ரைன், துருக்கி மற்றும் ரஷ்யா இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக தானிய ஏற்றுமதியை உக்ரைன் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒடேசா துறைமுகத்திற்கு சென்று தானிய ஏற்றுமதியை பார்வையிட்டார். மேலும் துருக்கி நாட்டு கப்பலில் தானியங்கள் ஏற்றப்படுவதையும் ஜெலன்ஸ்கி பார்வையிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky Visits export of Cereals at port


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->