லைமன் நகரை கைப்பற்றிய உக்ரைன் படைகள்.! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகாணங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.

இதையடுத்து இந்த 4 மாகாணங்களையும் அதிகாரபூர்வமாக ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டுள்ளது.

இதில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள லைமன் நகரை ரஷ்ய படைகள் தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக பயன்படுத்தி வந்த நிலையில், அந்நகரை உக்கரைப் படையினர் தொடர்ந்து சண்டையிட்டு மீட்டுள்ளனர்.

இதனால் அங்கிருந்த ரஷ்ய படைகள் பின்வாங்கியது. இது ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். மேலும் இதுகுறித்து உக்ரைன் அதிபர், லைமன் பகுதி ரஷ்ய துருப்புகளிடம் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டது. எங்கள் ராணுவத்திற்கு மிக்க நன்றி! என்று அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky happy as Ukraine soldiers captured lyman city


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->