ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் பொதுமக்களை போன்று நடத்தப்படுவார்கள் - அதிபர் ஜெலன்ஸ்கி - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைன் படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளன.

இதற்காக உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் முயற்சியில் ரஷ்யா 3 லட்சம் ராணுவ வீரர்களை அணி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளைகளை ஏற்க மறுத்தாலோ, சண்டையிட மறுத்தாலோ அல்லது உக்ரைன் படைகளிடம் சரணடைந்தாலோ 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ரஷ்யா அதிபர் புடின் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புடினின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், ரஷ்ய வீரர்கள் சரணடைய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் சரணடையும் ரஷ்ய வீரர்கள், உக்ரைனில் பொதுமக்களை போன்று நடத்தப்படுவார்கள் என்று அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky assures Russian soldiers treated as public if they surrender


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->