யூகான் என்னும் காலனின் கட்டுக்கடங்கா ஆட்டம்.. கொரோனா தொடர்பாக மீண்டும் அதிர்ச்சி தகவல் வெளியானது.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தங்களின் நாட்டு மக்களை பரிதாபமாக இழந்து வருகிறது. பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலைபரவல், மூன்றாம் அலை பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இந்நிலையில், உலகிற்கு கொரோனா என்ற கொடிய அரக்கனை பரிசாக தந்த சீனா, தற்போது மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறது. அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம் என்றாலும், சீனாவின் மற்றொரு முகத்தை உலக நாடுகளுக்கு காண்பித்துவிட்டதாக உலகளாவிய விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும், கொரோனா வைரஸ் திட்டமிட்டே பரப்பப்பட்டது என்று முன்னாள் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கடுமையாக எதிர்த்து. மேலும், அங்குள்ள உகான் வைரஸ் ஆய்வியல் மையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அல்லது வேண்டும் என்றே கொரோனா உலக நாடுகளுக்கு பரபரப்பப்பட்டதாகவும், சீனா வைரஸ் என்று அதிபர் ட்ரம்ப் முதலில் கொரோனாவை கூற, இருநாட்டிற்கும் இணக்கம் ஏற்பட்டு கொரோனா தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிபர் ட்ரம்ப் பல பரபரப்பு தகவலை தெரிவித்து இருந்தார். 

சீனா கொரோனா விஷயத்தில் உலக நாடுகளுக்கு பல உண்மைகளை கூறவில்லை என்றும், சீனா உலக நாடுகளை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்க வைத்துவிட்டது என்றும், சீனாவின் யூகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியுள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது., முழுமையான ஆதாரம் வந்ததும் சீனாவின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். 

சீனாவின் யூகான் வைராலஜி ஆய்வகம் குறித்து இன்று வரை பல சர்ச்சை பதிவுகள் மற்றும் கருத்துகள், செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. சீனா தனது மக்களை கொன்று உலக நாடுகளிடம் இருந்து தப்பிக்க நாடகம் ஆடியது மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு பெரும் சோகத்தை அளித்துவிட்டதாகவும் பல குற்றசாட்டுகள் இருக்கிறது. 

இந்நிலையில், வாஷிங்க்டன் எக்ஸாமினர் (Washington Examiner) பத்திரிகையில் பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலில், " சீனாவின் யூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது உண்மை தான் என்றும், சீனா உலக நாடுகளுக்கு பல்வேறு விஷயங்களை மறைத்துவிட்டது என்றும், சீனாவின் யூகான் ஆய்வகத்தில் நடைபெற்ற சோதனையில் கொரோனா வைரஸ் உருவாகி உலகத்திற்கு பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது, யூகானின் வைராலஜி ஆய்வகத்தில் சோதனைகள் செய்ய சரியான பாதுகாப்பு முறைகள் இல்லை என்றும், பாதுகாப்பு முறைகள் மற்றும் நடவடிக்கைகள் இல்லாமல் தான் அங்கு பல ஆராய்ச்சி நடந்து வந்தாக வைராலஜி ஆய்வக தலைமை அதிகாரி ஷி ஜெங்லி (Shi Zhengli) தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஈரப்பதம் உள்ள சந்தையில் இருந்து பரவியிருக்க வாய்ப்பில்லை என்றும், வைரஸ் பரவுவது தெரிந்தும் அதனை உலக நாடுகளுக்கு மறைத்து சீனா ஏன்? பரப்பியது. 

முதலில் சந்தையில் இருந்து கொரோனா பரவியது, பின்னர் விலங்குகளில் (வெளவால்) இருந்து பரவியது என்று ஏன்? மருத்துவ அறிக்கைகளை மாற்றி மாறி கூற வேண்டும். 80 ஆயிரம் விலங்குகளிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஏன்? ஒன்றில் கூற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியது என்று உறுதி செய்ய முடியவில்லை?. யூகான் வைராலஜி ஆய்வகத்தின் சாவியை வைத்திருக்கும் சீனா, தனது நாடு முதலில் பாதிக்கப்பட்டுள்ளது போல உலக நாடுகளிடம் சித்தரித்து, தற்போது அவர்களை கொலையும் செய்து காப்பாற்றியும் இருக்கிறது.

ஆனால், உலக நாடுகளுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூகான் ஆய்வகம் தொடர்பான தகவலை அறிந்த ஆய்வாளர்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரை பலரும் சீனாவின் பிடியில் இருக்கும் நிலையில், அங்கிருந்து எப்பிடியோ தப்பித்து வந்த பல சீனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சமயத்தில் ஆய்வகம் மற்றும் சீனாவின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பல பரபரப்பு தகவலை தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: Washington Examiner Magazine - More evidence that the Wuhan lab-leak theory is the correct one  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wuhan Virology Institute Leak Corona Virus Outbreak World 8 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->