நேபாளம் : கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த.. உலகின் குள்ளமான மனிதர்.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தை சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி  என்பவர் உலகின் மிக குள்ளமானவர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

நேபாளம் நாட்டைச் சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி. 2 அடி 5 அங்குலம் (73 செ.மீ) கொண்ட உலகின் மிக குள்ளமானவர் என்று, கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி சிந்துலி எந்த மாவட்டத்தில் பிறந்தார். இவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். தற்போது அவர் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

முன்னதாக, உலகின் குறைந்த வயதுடைய இளைஞர் என்று ககேந்திர தாபா மகார் என்பவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு காலமானார். மேலும், உலகிலேயே உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவை சேர்ந்த ஜோதி அம்கே தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worlds shortest man Guinness Book of World Records


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->