கரோனா விஷயத்தில் உலகிற்கு ஆலோசனை கூறும் இந்திய மருத்துவர்கள்..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, உலகளாவிய விஞ்ஞானிகள் மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய விஞ்ஞானிகளும் உலகத்திற்கு வழி காட்டி வருகின்றனர். 

காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்து வருபவர் டாக்டர் எஸ்.எஸ்.வாசன். இவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் விலங்கு சுகாதார ஆய்வகத்தில் ஆபத்தான நோய்க்கிருமி குழுவை இவர் வழிநடத்தி வருகிறார். இவர் கடந்த காலத்தின் போது ஆபத்தான நோய் கிருமிகள் தொடர்பான ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றங்களை கண்டு உள்ள குழுவை தலைமை தாங்கி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், சீனாவிற்கு வெளியே ஆராய்ச்சிக்காக பல வைரசை வளர்த்தெடுப்பதில் எஸ்.எஸ்.வாசன் மற்றும் அவரது குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வைரஸ் தொடர்பான உலகளாவிய தரவுகளை பகுப்பாய்வு செய்து மரபணு வரிசையையும் இவர்கள் சீர்படுத்தி வருகின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் சுனேத்ரா குப்தா. 

இவர் கரோனா வைரஸை பகுப்பாய்வு செய்வதற்கான ஆராய்ச்சியை இங்கிலாந்து நாட்டில் நடத்தி வருகிறார். மேலும், வைரஸ் நோய் கிருமிகளின் குணாதிசயம் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். கரோனாவின் தாக்கத்தில் இருந்து குணமடைவதை உறுதி செய்யும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான சோதனை அவசியம் என்று அழுத்தமும் கொடுத்தவர் ஆவார். 

இதனைப் போன்று மாக்ஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருபவர் இந்திய மருத்துவர் அரிஞ்சய் பானர்ஜி. இவர் பல ஆற்றல்களை தன்னகத்தே கொண்டுள்ள நிலையில், கனவுக் ஆராய்ச்சி நிறுவனத்தில் அங்கமாகுவும் செயல்பட்டு வருகிறார். இவர் மற்றும் இவருடன் சேர்ந்து பணியாற்றி வரும் நபர்கள் மூலமாகவே கரோனா தொற்று வரிசை தனிமைப்படுத்த முடிந்திருக்கிறது. 

மேலும், இவர் ஆராய்ச்சி ஆய்வுகள், நோய் எதிர்ப்பு சக்தி, வைராலஜி மூலக்கூறு ஆய்வுகள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் பல வைரஸை ஆராய்ச்சி செய்து கட்டுரைகளை சமர்ப்பித்து பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.இவர்களை உலகமே கொண்டாடுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world wish indian doctors to research corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->