கத்தாரில் டபுள் டமாக்கா.. கால்பந்து போட்டியை தூக்கி அடிக்கும் ஒட்டகத்தின் அழகு போட்டி.! - Seithipunal
Seithipunal


கத்தாரில் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் கத்தாரில் ஒட்டகங்களுக்கான அழகு போட்டி அனைவரின் கவனம் ஈர்த்துள்ளது.

கத்தாரின் ஆஷ்-ஷஹானியா பகுதியில் ஜாயென் கிளப் சார்பில் நடந்த இந்த போட்டிக்காக அரபு நாடுகள் முழுவதில் இருந்தும் ஒட்டகங்கள் கலந்து கொள்கின்றன. 

இதுபற்றி பேசிய கத்தார் ஒட்டகம் ஜாயென் கிளப் தலைவர் ஹமத் ஜாபர் அல்-ஆத்பா "உலக கோப்பை கால்பந்து போட்டி போன்று ஒட்டகங்களுக்கான உலக கோப்பை போட்டியையும் கத்தார் நடத்தி வருகிறது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இருந்து போட்டிக்கான ஒட்டகங்கள் கலந்து கொள்கின்றன. அவற்றின் இனம் மற்றும் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அவை பிரிக்கப்பட்டுள்ளது. 

இவற்றில் கருப்பு ஒட்டகங்களை எடுத்து கொண்டால், உடல் அளவு மற்றும் தலை மற்றும் காதுகள் அமைந்த பகுதி கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால் மகாதீர் வகை ஒட்டகத்திற்கு காதுகள் கீழ் நோக்கி தொங்கி கொண்டிருக்க வேண்டும். நேராக நிற்க கூடாது. அவற்றின் வாயும் வளைந்து இருக்க வேண்டும. 

ஆசெல் ஒட்டகங்கள் என சிறப்பு பண்புகள் கொண்டவை. அதன் காதுகள் அமைந்த பகுதி மிக முக்கியம். எலும்புகள் மிக மென்மையாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஒட்டகங்களுக்கு எக்ஸ்ரே கொண்டு பரிசோதனை நடத்தப்படும். ஒட்டகங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அதன் அழகை மெருகேற்றி, மோசடி நடைபெறாமல் தடுக்க இந்த பரிசோதனை மருத்து குழுவால் நடத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup camel beauty contest in qatar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->