ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு  தடை - தாலிபன் அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்த தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் வேலைக்கு செல்லவும் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தடை விதித்தது. 

மேலும், பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பூங்காக்களில் ஆண்கள் இருக்கும் போது பெண்களை அனுமதிக்கக் கூடாது. திரைப்படம், கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல கூடாது மற்றும் ஜிம் மற்றும் பூங்காகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதனால் பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட முடியாமல் போய்விட்டது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களை நடத்த தடை விதித்து தாலிபான்கள் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தாலிபான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது. 

அனைவரும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களின் பெயரில் உள்ள அழகு நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவது அந்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens not run in womens Beauty parlour in Afghanistan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->