மந்திரவாதியின் ஒரு வார்த்தையால் மாயவலைக்குள் சிக்கிய 13 வயது சிறுமி, குகைக்குள் அடைத்து 15 ஆண்டுகள் கற்பழிப்பு, அம்பலமான ரகசியம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் குகை ஒன்றில் 13 வயதில் கடத்திய சிறுமியை 15 வருடமாக மந்திரவாதி ஒருவர் தனது பிடியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. 

இந்தோனேசியாவில் வசிக்கும் தம்பதியினர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது 13 வயது  மகளை பேய் விரட்டும் மந்திரவாதியிடம் அழைத்து சென்றுள்ளனர்.அப்பொழுது அந்த மந்திரவாதி அந்த சிறுமிக்கு பூஜை செய்ய வேண்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் செல்லுங்கள்  என கூறி பெற்றோர்களை அனுப்பியுள்ளார் . ஆனால், அதன் பிறகு அவர்களது மகளை காணவில்லை.
 
இதுகுறித்து மந்திரவாதியிடம் கேட்ட போது, உங்களது மகள் வேலை தேடி ஜகார்த்தா நகருக்கு சென்று விட்டாள் என கூறியுள்ளார். மந்திரவாதியின் பேச்சை கேட்டு அந்த தம்பதியினர் சென்று விட்டனர். ஆனால் சிறுமியிடம் இருந்து எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

பின் 15 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே இருந்த குகை ஒன்றில் இருந்து  28 வயது இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார். 

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது  அவர்தான் கடத்தப்பட்ட அந்த 13  வயது சிறுமி என தெரியவந்தது.

மேலும் முன்ஜென்மத்தில் அம்ரின் என்ற இளைஞர் அந்த சிறுமியின் காதலனாக இருந்ததாகவும், அந்த இளைஞரின் ஆன்மா தன்னுள் புகுந்திருப்பதாகவும் அவரை நம்ப வைத்துள்ளார்.மேலும் அந்த இளைஞரின் ஆன்மா சிறுமியுடன் உடலுறவு வைத்து கொள்ள  விரும்புவதாகவும் கூறி கடந்த 15 ஆண்டுகளாக அவரை பாலியல் வன்கொடுமை செய்து தனது காமவெறியை தீர்த்துள்ளார்.மேலும், கர்ப்பம் ஆகாமல் தடுக்க பலமுறை கருக்கலைப்பு மருந்தும் கொடுத்துள்ளார். 

                

மேலும் கடந்த 15 வருடங்களாக அந்த இளம்பெண்ணை ஏமாற்றி, பகலில் குகையிலும், இரவில் மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே உள்ள குடிசையில்  மறைத்து வைத்துள்ளார்.

இது பற்றி போலீசார் வழக்குபதிவு செய்து மேலும்  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

wizard rapes young girl past 15 years in cave


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal