மோடியின் அமெரிக்கா பயணம் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரானது அல்ல - வெள்ளை மாளிகை - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் தனி விமான மூலம் நியூயார்க் சென்றடைந்த பிரதமர் மோடி அமெரிக்காவின் பெரும்பணக்காரரும், டெஸ்லா, டுவிட்டர் நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா பாராளுமன்றத்தில் சிறப்புரை, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பு என பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். மேலும் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம்,தொலைத் தொடர்பு உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்கா வருகை ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரானது அல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலர் ஜான் கிர்பி, இந்தியா உலக அளவில் வலிமை மிகுந்த நாடாக வளர்ந்து வருவதை அமெரிக்கா என்றும் ஆதரிக்கும்.

மேலும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சிறப்பு கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்பதை அமெரிக்கா வரவேற்கிறது என்றும், இந்தோ-பசிபிக் பகுதிகளில் சுதந்திரமான வர்த்தகத்தை தொடர இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

White house says pm Modi America visit not against Russia and China


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->