உபயகோமில்லாத கணக்குகள் முடக்கம்..! ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ள புதிய கொள்கை மற்றும் நெறிமுறைகளின்படி, 6 மாதக்காலமாக தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை செயலற்ற கணக்குகளாகவே அந்த நிறுவனம் கருதும்.

எனவே, செயலற்ற லட்சக்கணக்கான கணக்குகளை முடக்குவதன் மூலம், ட்விட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்துவோருக்கான சேவைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்த முடியும் என்று ட்விட்டர் நிறுவனம் கருதுகிறது.

அதிலும், குறிப்பாக ஏராளமான யூசர்நேம்கள் திரும்பப்பெற்று தேவைப்படுவோர்களுக்கு அதை வழங்கலாம் என்றும் கருதுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 11ஆம் தேதியிலிருந்து செயலற்ற கணக்குகளை அந்த நிறுவனம் முடக்க இருக்கிறது.

கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unused accounts blocked in twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->