ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிக்குள் முன்னேறிய உக்ரைன் படையினர்.! 20 கிராமங்கள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 6 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனில் 1000-கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிர படுத்தியுள்ளன.

இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ் பகுதியில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ அதிகாரி ஒலெக்ஸி கிரமோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் படையினர் 50 கீ.மீ வரை முன்னேறியுள்ள நிலையில், காா்கிவ் மற்றும் பிவ்டென்னி புஹ் பகுதிகளில் 700 சதுர கி.மீ அளவிலான நிலப்பரப்பை உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கார்கீவ் பகுதியில் தங்களுக்கு கிடைத்த வெற்றி ரஷ்ய படைக்கு எதிராக போராடும் அனைத்து படையினருக்கும் ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine troops captured villages occupied by russia


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->