போரில் முன்னேறும் உக்ரைன் படைகள்.! ரஷ்யாவிடமிருந்து 6000 சதுர கி.மீ. பகுதிகள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய படைகள் தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன.

தொடர்ந்து, போராடிவரும் உக்ரைன் படைகள் கார்கீவ் பகுதியில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் டொனெட்ஸ்க், இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் நகரங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் படைகள் தீவிரமாக போராடி வருவதாகவும், ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் இருந்த 6000 சதுர கி.மீ. பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்ய வீரர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், வட கிழக்கு எல்லையில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவதாகவும், ரஷ்ய வீரர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine recaptures 6000km in Russian occupied area


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->