உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து - உயிரிழந்தவர்களுக்கு ஜெலன்ஸ்கி மரியாதை.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரிவில் மழலையர் பள்ளி அருகே கடந்த புதன்கிழமை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி துணை உள்துறை அமைச்சர் மற்றும் ஐந்து உயர் அமைச்சக அதிகாரிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

குழந்தைகள் உட்பட 25 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், போர் காலத்தில் நடந்தது விபத்து இல்லை என்றும், இந்த துயரம் போரின் விளைவுதான் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சிலரின் குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு சோகமான சந்திப்பை நடத்தினார். அதில் ஏழு மூத்த அதிகாரிகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஓலேனா ஜெலென்ஸ்காவும் ஏழு சவப்பெட்டிகளிலும் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine President Zelensky honours those killed in helicopter crash


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->