துருக்கி நாடாளுமன்றம் அருகே தீவிரவாத தாக்குதல்! 2 பேர் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


துருக்கி அங்காராவில் நாடாளுமன்றம் அருகே அமைந்துள்ள உள்துறை அமைச்சக கட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. துருக்கி நாடாளுமன்றம் இன்று அந்நாட்டு அதிபர் ரெசேப் தயீப் எர்டோகன் உரையுடன் தொடங்க இருந்தது.

இந்த நிலையில் தான் இன்று காலை அந்நாட்டு நேரப்படி 9.30 மணி அளவில் வாகனம் ஒன்றில் வந்த 2 தீவிரவாதிகளில் ஒருவர் நாடாளுமன்றம் அருகே உள்ள உள்துறை அமைச்சகத்தின் கட்டட பகுதிக்குள் தடையை மீறி நுழைந்து மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலை மற்றொரு தீவிரவாதியை பாதுகாப்பு படைவினர் சுட்டுக்கொன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அந்தப் பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் துருக்கி நாடாளுமன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தீவிரவாதிகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டிடத்திற்குள் சென்று வெடிகுண்டை வெடிக்க வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey thwarts terrorist attack near parliament in Ankara


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->