இன்று சூரிய கிரகணம்.. நிகழும் நேரம்.. எங்கு தெரியும்? இந்தியாவில் காண முடியுமா? - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. இது உலகின் பல பகுதிகளில் இருந்து தெரியும். இது முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும். குறிப்பாக, இது கார்த்திகை மாத சனி அமாவாசை நாளில் நடைபெறுகிறது. இது தவிர ராகுவின் தாக்கமும் இந்த கிரகணத்தில் இருக்கும்.

அமாவாசை நாளில் சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களை தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.

மந்திரச் சித்தர்களும் மாந்திரீகக் கோயில்களும் புத்தகத்தை பெற்று நித்ரா மாத காலண்டர் 2022 (பிரிண்டிங் வடிவில்) முற்றிலும் இலவசமாக பெற்றிடுங்கள்.

குறிப்பாக கிரகண நாளில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது என கிரகண சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதன்பின் அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. அதாவது கிரகண நேரத்தில் பூமியின் மீது அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கதிர்வீச்சுகளால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

எனவேதான், கர்ப்பிணிகளை வெளியே விடமாட்டார்கள். கிரகண கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படும் குழந்தையின் உடலமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

இந்தியாவில் தெரியுமா?

இன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. 

சூரிய கிரகணம் தெரியும் நேரம் :

இன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3.07 மணிக்கு முடிவடையும்.

எந்தெந்த நாடுகளில் பார்க்கலாம்?

அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் பகுதி சூரிய கிரகணமாக தெரியும்.

எப்படி பார்க்கலாம்?

எந்த சூரிய கிரகணத்தையும் நாம் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. இதுவே சந்திர கிரகணத்தை நாம் கண்களால் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில், அதற்குரிய ஃபில்டர்கள் பொருத்திய கண்ணாடிகள் வழியாகவே பார்க்க வேண்டும். அதுவும், வெகு சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க வேண்டும். ஏனென்றால், சூரிய கிரகணத்தில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், அதற்குரிய கண்ணாடி இருந்தாலும், நீண்ட நேரம் பார்க்கக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

total eclipse in new zealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->