101 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என அறிவித்த நாடு.. மறுநாளே ஏற்பட்ட பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 1,99,71,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 7,33,103 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1,22,00,847 பேர் குணமடைந்துள்ளனர்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

நியூசிலாந்து நாட்டை பொறுத்த வரையில் துவக்கத்தில் சற்று கொரோனா பரவல் வேகமெடுத்து இருந்தாலும், கொரோனா தடுப்பு  நடவடிக்கைகளின் காரணமாக, கொரோனா கட்டுக்குள் வந்தது. அங்கு 1,569 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 22 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 4,826,349 ஆகும். 

உலகத்திலேயே முதல் நாடாக கொரோனாவின் பிடியில் இருந்து தப்பித்த நாடு நியூசிலாந்து. கடந்த 101 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும், இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், மக்கள் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்து நாட்டுக்கு 20 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜூலை 30ந்தேதி  வந்துள்ளார்.  அவருக்கு மூன்று நாளில் பிறகு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என தெரிய வந்தது. ஆனால், அவர் வந்த 9 நாட்களுக்கு பின்னர் நடந்த மற்றொரு பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today one person positive in new zealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->