ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் குரங்கு அம்மை தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


குரங்கு அம்மை என்பது சின்னம்மை போன்று அரிதாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் ஒரு வகை வைரஸ் தொற்று நோய்.

இந்நோய் சின்னம்மை விட தாக்கம் குறைவாக இருந்தாலும் மிகுந்த ஆபத்தான ஒரு தொற்றுநோய்.

உடல் முழுவதும் ஏற்படும் கொப்பளங்கள், காய்ச்சல், தலைவலி போன்றவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும். மேலும் சுவாச குழாய் மூலம் மற்றும் உடலில் ஏற்படும் உடைந்த உயிரியல் மூலமாகவும் இந்த வைரஸ் வேகமாக பரவ கூடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் இருந்த நிலையில் தற்போது குரங்கு அம்மைத் தொற்று கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளதால் உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து குரங்கு அம்மை தொற்று எதிர்கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The first monkeypox infection in the United Arab Emirates


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->