அபுதாபியில் பராக்கா அணுமின் நிலையம் மீது டிரோன் தாக்குதலால் பரபரப்பு..!
Tension in Abu Dhabi following a drone attack on the Barakah Nuclear Power Plant
ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அணுமின் நிலையத்தின் உள் சுற்றுச்சுவருக்கு வெளியே இருந்த மின்சார ஜெனரேட்டரில் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தக் காயங்களும் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணுமின் நிலையத்தின் முக்கிய அமைப்புகள் இப்போது வழக்கமாக இயங்கி வருவதாகவும் அணுசக்தி ஒழுங்குமுறைக்கான கூட்டாட்சி ஆணையம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ட்ரோன் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து அபுதாபி ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக இஸ்ரேல் - அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலின் போது, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் பல ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், விரைவில் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மிக மோசமான நிலையை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அத்துடன், ''ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஈரானுக்கு ஆர்வம் உள்ளது'' என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
English Summary
Tension in Abu Dhabi following a drone attack on the Barakah Nuclear Power Plant