பாகிஸ்தான் எங்கள் இரண்டாம் வீடு..!! தாலிபான் செய்திதொடர்பாளர் பேச்சு...!! - Seithipunal
Seithipunal


ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும் நீண்ட நாட்களாக ஆப்கானில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் தாலிபான்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் அங்கு ஆட்சி அமைக்கும் பணிகளில் தாலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானை தாலிபான்கள் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் தற்போது 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த சில கட்டுப்பாடுகள் இருக்காது எனவும் தாலிபான்கள் கூறியுள்ளனர்.

சமீபத்தில் தாலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் அண்டை நாடுகளுடனான உறவை பற்றி கூறும் போது,

பாகிஸ்தான் எங்களுக்கு எல்லைப்புற நாடு மற்றும் மதத்தின் அடிப்படையிலும் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் இருப்பவர்கள். எனவே பாகிஸ்தான் இரண்டாவது வீடு போன்றது. அதுமட்டுமின்றி இந்தியா- பாகிஸ்தான் எல்லை புற பிரச்சனையை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நட்புறவை மேம்படுத்தவே விரும்புகிறோம் என கூறினார்.

ஆப்கானை கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும், இஸ்லாமை அடிப்டையாக வைத்து அனைத்து ஆப்கானியர்களையும் உள்ளடக்கிய ஒரு வலிமையான ஆட்சியை அமைக்க விரும்புவதாகவும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taliban spokesman says Pakistan is our second home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->