தைவான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீன போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள்.! தைவான் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

மேலும் தைவான் எல்லையில் சீனா அவ்வப்போது போர் பயிற்சி ஈடுபட்டு வருவதால் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தைவான் எல்லை பகுதியில் சீனா போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் தைவான் எல்லையில் சீன ராணுவத்தை சேர்ந்த 25 போர் விமானங்கள் மற்றும் 8 விமானம் தாங்கிய கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், தைவான் ராணுவம் பதில் நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாக தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taiwan accuses China over warplanes on Taiwan border


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->