உடனடியாக குவிக்கப்படும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் - இருபிரிவினர் இடையே திடீரென மோதல் வெடித்தது : நிலவும் உச்சகட்ட பதற்றம்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

உலகையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அதிபயங்கர தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.

ஆனால் முன்னதாக இலங்கை அரசோ உள்ளூரை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை குற்றம் சாட்டியது. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு உதவி செய்ததும் அவர்கள் தான் என்று கூறப்பட்டது.

எனவே தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை  அமைப்பை தடை செய்து, ஏராளமானோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளால் இலங்கையின் பல பகுதிகளில் இரு பிரிவினர் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நிலமையை கட்டுக்குள் கொண்டுவர இரு தரப்பும் அமைதி காக்குமாறு அதிபர் சிறிசேனா அறிவுறுத்தி வருகிறார். மத தலைவர்களும் தொடர்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையின் மேற்கு கடற்கரை நகரான சிலாவில் இன்னும் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அங்கு இருபிரிவினர் இடையே திடீரென மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து அங்குள்ள வழிபாட்டுதலங்கள் மற்றும் சில கடைகள் தாக்குதலுக்கு உள்ளாயின. இதனால் அந்த நகரம் முழுவதும் பெரும் பதற்றம் அதிகரித்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தற்போது,அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், வன்முறைகள் பரவாமல் தடுக்க சமூக வலைத்தளங்கள் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri-Lankas-Government-Information-Department


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->