என்னடா இது புதுசா இருக்கு... சூரியன் சிரிக்குதா?. - Seithipunal
Seithipunal


உலகில் மிக அபூர்வமான சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறுநாள் நிகழ்ந்தது. அதன் பிறகு ஏற்பட்ட விண்வெளி மாற்றத்தினால் சூரியன் சிரித்த முகத்துடன் கட்சி அளிக்கிறார். அதனை நாசா மிக்கது துல்லியமாக படம் பிடித்துள்ளது.

அந்த புகைப்படம் நாசாவின் சன் டுவிட்டர் பக்கத்தில் பகிரபட்டுள்ளது. அந்த படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. இது சூரியன்  மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் மிகச் சரியான இடங்களில் தற்செயலாக உருவானதால், நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. 

இந்த இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. மேலும், மூன்றாவது துளை சூரியனின் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகிறது. 

இதனை புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அந்த துளைகள்  வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும் என்று நாசா விளக்கி கூறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

smily sun nasa photo uplode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->