மத்திய பாக்முட் நகரத்தை நெருங்கும் ரஷ்ய படைகள்.!! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட கிழக்கு நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் நகரத்தின் மத்திய பகுதி அருகே நெருங்கியுள்ளதாக ரஷ்யாவின் கூலிப்படை குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் உக்ரைனின் யெவ்ஜெனி ப்ரிகோஜின் பாக்முட் என்று கூறப்படும் உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு இது நகர நிர்வாக கட்டிடம் என்றும், பாக்முட் நகரத்தின் மைய பகுதியை நெருங்கி விட்டதாகவும் கூலிப்படை தலைவர் வாக்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்து முன்னேறுவதற்கான தேவைப்படும் ஆயுதங்களை பெற்றுக் கொண்டதாகவும், பாக்முட் ஹாட்ஸ்பாட் பகுதியை விரைவில் கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே பாக்முட் நகரத்தை ரஷ்யப்படைகள் முழுமையாக கைப்பற்றினால் உக்ரைனின் கிழக்கு நகரங்களை ரஷ்யா எளிதாக கைப்பற்றி விடும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian troops approaching central of Bhakmut city


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->