உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்..! - Seithipunal
Seithipunal


உக்ரனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 14 மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன், ஜாபோர்ஷியா, சோலாடர் மற்றும் பெரும்பாலான தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை ரஷ்ய அதிபர் புடின் நேற்று பார்வையிட்டார். உக்ரைன் போரின் முக்கிய பகுதியான கெர்சன் பகுதிக்கு சென்ற ரஷ்ய அதிபர் அங்குள்ள ராணுவ தலைமையகம் மற்றும் ரஷ்ய படைகளின் முகாம்களுக்கு சென்று கள நிலவரத்தையும், சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருவதையும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து லுஹான்ஸ்க்கு சென்று வான்வழிப் படைகளின் தளபதிகள், டினீப்பர் இராணுவக் குழு மற்றும் மூத்த அதிகாரிகளிடம் கள நிலவரங்களை கேட்டறிந்தார். மேலும் இரண்டு மாகாணங்களிலும் ராணுவ வீரர்களிடம் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகைக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபரின் இந்த உக்ரைன் பயணத்தின் பொழுது வான்வழி படைகளின் தளபதி ஜெனரல் மிகைல் டெப்லின்ஸ்கி மற்றும் கர்னல் ஜெனரல் ஒலெக் மகரேவிச் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian president Putin visits captured cities in Ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->