இந்தியாவின் ஜி20 மாநாட்டில் பங்கேற்காத ரஷ்ய அதிபர் புடின்.! காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


நடப்பாண்டில் ஜி20 அமைப்பிற்கான தலைமையை இந்தியா வைக்கும் நிலையில் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் வெள்ளி நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. 

அடுத்த மாதம் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பைடன் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி டெல்லி வர உள்ளார். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வரும் திட்டம் இல்லை என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அந்நாட்டு ஊடகத்திற்கு அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் தற்போது நிலவிவரம் அசாதாரண சூழலால் ராணுவ நடவடிக்கைகளில் அவர் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டிலும் புடின் நேரடியாக பங்கேற்காமல் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian president avoid to participate in G20 conference in India.


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->