ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ரஷ்யா! பசி பட்டினியால் மரணம்! ஐ.நா. புகார்! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரினால் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. 

உக்ரைன், பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது போர் காரணமாக தடைப்பட்டது. 

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷியாவுடன், ஐ.நா. மற்றும் துருக்கி கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்து கொண்டதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்தும் கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதம் தெரிவித்தது. 

இந்த கருங்கடல் தானிய ஒப்பந்தமானது சமீபத்தில் காலாவதியானதால், ரஷியா அதை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்து அதிலிருந்து விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் தெரிவிக்கையில், "மனிதாபிமான முறையில் தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. 

வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை தானிய விலை உயர்வு மிக கடுமையான முறையில் பாதித்து, பசி-பட்டினியால் மக்கள் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்படும். போதுமான தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்டது. 

உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் ராணுவ பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பலாக கருதப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது என, மார்ட்டின் கிரிபித்ஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia withdrew agreement UN Complain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->