மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.! ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்யா.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருவதால் உக்ரைன் படைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ரஷ்ய படைகளை பின்வாங்க செய்து முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் போரில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும், உயர்நிலை பள்ளி படித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணுவத்தில் சேர்பவருக்கு மாதம் 2,700 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும், வெளிநாட்டினரும் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia started to recruit for army with 2 lakh per month salary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->