உக்ரைன் ட்ரோன் தாக்குதல் எதிரொலி.! தானிய ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது  ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ரஷ்யாவிலிருந்து கருங்கடல் வழியாக செய்யப்படும் தானிய ஏற்றுமதி முற்றிலும் தடைப்பட்டது.

இதனால் சர்வதேச சந்தைகளில் உணவு பற்றாக்குறை நிலவியது. இதையடுத்து ஐ.நா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் துருக்கி முன்னிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே தானிய ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் உக்ரைன் படைகளால் கிரீமியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு பிரிட்டன் ராணுவம் உதவியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தானிய ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகுவதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த முடிவுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் உலக நாடுகளில் உணவு பஞ்சம் அதிகரிக்க கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia decide to pull out of UN grain deal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->