எதிரிகளின் வளையத்தை தாண்டி மீட்பு! ஈரானில் சிக்கிய அமெரிக்க வீரரை காப்பாற்றிய ராணுவம்! - டிரம்ப்
Rescued through enemy lines Army rescues American soldier trapped Iran Trump
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கிடையேயான பதற்றமான போர் நிலை நேற்று 6வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த போரில் ஈரான் பலவீனமடைந்து, ஏவுகணை தாக்குதல் நடத்த முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மாறாக, ஈரான் தொடர்ந்து தனது தாக்குதல் திறனை வெளிப்படுத்தி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், ஈரானில் அமெரிக்காவின் எப்-15 ‘ஸ்ட்ரைக் ஈகிள்’ போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த விமானத்தில் இருந்த 2 அமெரிக்க வீரர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க அமெரிக்க படைகள் மலைப்பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.
இதற்கிடையே, அந்த வீரரை கண்டுபிடித்து காவலர்களிடம் ஒப்படைக்குமாறு ஈரான் மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததுடன், அதற்கான பரிசும் அறிவித்தது. இதனால், ஒருபுறம் ஈரான் தேடுதல் வலைவீசிய நிலையில், மறுபுறம் அமெரிக்காவும் தனது வீரரை மீட்க முழு அளவிலான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.
இரண்டு நாட்கள் நீடித்த அதிரடி தேடுதல் நடவடிக்கையின் பின்னர், காணாமல் போன அமெரிக்க வீரர் பத்திரமாக மீட்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “எங்கள் வீரரை நாங்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளோம். அமெரிக்க வரலாற்றிலேயே மிகச் சவாலான மற்றும் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளில் ஒன்றை ராணுவம் மேற்கொண்டது.
எதிரிகள் நிமிடத்திற்கு நிமிடம் அவரை நெருங்கிக் கொண்டிருந்தாலும், எங்கள் படைகள் 24 மணி நேர கண்காணிப்புடன் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளன.
தற்போது அவர் நலமாக உள்ளார்” என தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம், இரு தரப்புகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Rescued through enemy lines Army rescues American soldier trapped Iran Trump