உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்.! ரஷிய அதிபர் புதின் குற்றம்சாட்டு.! - Seithipunal
Seithipunal


உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் போர் 100வது நாளை கடந்த உள்ளது. இந்நிலையில் இரு நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

உலக அளவில் ஏற்படும் உணவு பஞ்சத்திற்கு காரணம் ரஷ்யாதான் என்று மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், வளர்ந்து வரும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து புதின், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை உலக சந்தைகளில் மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலையை உயர்த்துகின்றன.

உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சனைக்கு ரஷ்யாவை குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin blames Western nations for the food crisis


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->