இந்திய வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறார்கள் செர்பியா பயிற்சியாளர்கள் - ஜனாதிபதி முர்மு - Seithipunal
Seithipunal


இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, சூரினாம் மற்றும் செர்பியா நாடுகளுக்கு 6 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் கட்டமாக 3 நாட்கள் சூரினாம் பயணத்தை வெற்றிகரமாக முடித்த அவர், நேற்று ஐரோப்பிய நாடான செர்பியாவிற்கு சென்றடைந்தார். அங்கு செர்பியாவின் அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளால் ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி செர்பியாவின் காந்திஜீவா சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செர்பியா அதிபர் அலெக்சாண்டர் உசிச்சை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து செர்பியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அதில் செர்பியாவின் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் இந்தியாவில் பலருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றும், இந்திய வீரர்களுக்கு செர்பியா பயிற்சியாளர்கள் திறமைகளை மேம்படுத்த பயிற்சி அளித்து உதவுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய திரைப்படங்களுக்கு செர்பியா நாட்டில் சிறந்த வரவேற்பு இருக்கிறது. இந்திய திரைப்பட ஆர்வலர்களுக்கு செர்பியா புதிய இலக்காக அமைந்துள்ளது. இந்தியாவைப்போன்று செர்பியா மக்களும் யோகா மற்றும் ஆன்மீக மருத்துவ முறையில் அதிக ஈடுபாடுடன் சிறந்து விளங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President murmu says Serbian coaches help improve Indian players skills


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->