இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இவர்தான் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கருத்து கணிப்பு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் 2-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியதால் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்த வகையில் முதல் கட்ட தேர்தலில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒருவர் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்கள். 

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்றன ஆகஸ்டு 4-ஆம் தேதி தொடங்கப்பட்டு செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்க இருக்கிறது‌. புதிய பிரதமருக்கான தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து மொத்தம் 4,946 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ரிஷி சுனக் மைனஸ் 30 மதிப்பெண்களை கொண்டுள்ளார். லிஸ் டிரஸ் மைனஸ் 32 மதிப்பெண்ணை கொண்டுள்ளார். இதன் மூலம் லிஸ் டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poll shocked next Prime Minister of England


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->