பிரேசிலில் குரங்கு அம்மை நோய் பீதியால் கொல்லப்படும் குரங்குகள்.! உலக சுகாதார அமைப்பு கவலை.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரேசிலில் குரங்குகளிடமிருந்து நோய் பரவுகிறது என்ற தவறான எண்ணத்தில் அதிக அளவு குரங்குகள் தல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோவில் 10 குரங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இதையடுத்து குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் கொல்லப்படுவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், 'இப்போது நாம் பார்க்கும் நோய் பரவல் மனிதர்களிடையே உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் நிச்சயமாக விலங்குகளைத் தாக்கக்கூடாது' என்று உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை பிரேசிலில் 1,700 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People killed monkeys in fear of monkey pox


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->