ஈராக்கிற்கு முட்டுக்கட்டை போட்ட அமெரிக்கா.. பெண்கடன் தெரிவித்த தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே, அமெரிக்கா மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் ஈரான் நாட்டுடைய இரண்டாவது சக்திவாய்ந்த நபரான இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். 

இந்த விசயத்திற்கு பதிலடி தரும் விதமாக ஈராக் நாட்டில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது அவ்வப்போது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் நாட்டிற்கு இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில்., அமெரிக்க நாட்டின் தூதரகம் அமைந்துள்ள பாக்தாத் நகரில் ஏவுகணைகள் விழுந்து வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஈராக் நாட்டில் இருக்கும் அமெரிக்க தூதரகமும் குறிவைத்து தாக்கப்பட்டது. 

இந்த தாக்குதல், நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலில் 3 இராக்கெட் குண்டுகள் தூதரக வளாகத்திற்குள் விழுந்து, ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியானது. இதற்குப்பின்னர் பாக்தாத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா ஈராக் நாட்டிற்கு ஆயுத விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் நாட்டில் பாதுகாப்பான சூழல் திரும்பும் வரை ஆயுத விநியோக நிறுத்தம் மற்றும் புதிய எப் - 116 இரக போர் விமானங்களை நிறுத்தியுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pentagon says to stop war plane distribution of iraq


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->