ஆப்கானின் ஆயுதமேந்திய கும்பலால் பாகிஸ்தானுக்கு ஆபத்து - பாக். பிரதமர் இம்ரான் கான்..! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடமாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்போர், அமெரிக்கா உட்பட கூட்டுப்படைகளின் அதிகாரப்பூர்வ விலக்கத்திற்கு பின்னர் தாலிபான்களால் அதிகாரத்தை கைப்பற்றி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அதிகாரத்தை கைப்பற்றிய தொடக்கத்தில் நல்ல ஆட்சியை மக்களுக்கு வழங்குவோம் என தெரிவித்த தலிபான், தற்போது நேர்மாறாக செயல்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினர், ஆட்சி அதிகார பங்கீடு விவகாரத்தில் தாலிபான்களை தாக்கி அழிக்க தொடங்கிவிட்டது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த பலரும், தலிபான்கள் முதலில் நல்லது செய்வதை போல பேசுவார்கள், பின்னாளில் தங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தி மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்வார்கள், கொடுமைப்படுத்துவார்கள் என்று தெரிவித்ததை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது. 

அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் வழங்காதது, பெண்கள் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளவும், பார்வையிடவும் கட்டுப்பாடுகள் மற்றும் தடை, பெண்கள் பொது இடங்களுக்கு செல்ல, கல்விகற்க பல்வேறு கட்டுப்பாடுகள் என தொடர்ந்துகொண்டே செல்கிறது. 

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு பண உதவி உட்பட பல உதவிகள் செய்து வந்த நாடுகளும், தலிபான் ஆட்சியை கைப்பற்றியதும் அதனை அடுத்தடுத்து நிறுத்திக்கொண்டது. இதனால் மக்கள் பல இன்னலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பணநெருக்கடியையும் ஆப்கானிஸ்தான் சந்திக்க தொடங்கியுள்ளது. 

சீனா மற்றும் பாகிஸ்தான் நமக்கு எப்படியாவது உதவிகள் செய்துவிடுவார்கள் என்று எண்ணிய தாலிபான்களுக்கு பெரும் அதிர்ச்சியாக பொருளாதார உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் சூழலில், ஆட்சி பங்கீடு பிரச்சனையில் தலிபான்கள் Vs ஐ.எஸ்.ஐ.எஸ் - கே சண்டை நடக்க தொடங்கியுள்ளது. தாலிபான்களை குறிவைத்து ஐ.எஸ் அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், " அனைவரையும் உள்ளடக்கிய அரசை தலிபான்கள் அமையாத பட்சத்தில், விரைவில் ஆப்கானில் உள்நாட்டு போர் ஏற்படும். அதன் தாக்கம் பாகிஸ்தானிலும் இருக்கும்.

அப்படி ஆப்கானில் உள்நாட்டுப்போர் ஏற்படும் பட்சத்தில், அகதிகள் மற்றும் மனிதாபிமான பிரச்சனைகள் முதற்கட்ட கவலைதரும் விஷயமாக அமையும். ஆயுதமேந்திய கும்பல்கள் ஆப்கானின் மண்ணை பயன்படுத்தி பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தும். அதனால் நிலையற்ற மற்றும் குழப்பமான சூழல் ஏற்படும் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Prime Minister Imran Khan Warning to Threat of Armed Afghan gang


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->