வேலையின்மை எதிரொலி.. மக்களுக்கு மரம் நடும் வேலையை கொடுத்த அரசு..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கமானது உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. பலர் தங்களின் வேலைகளையும் இழந்துள்ளனர். 

பெரும்பாலான நாடுகளில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், இந்தியாவிலும் இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது கட்டமாக அமாலாகியுள்ள ஊரங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்கவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சூழ்நிலையில், சுமார் 63 ஆயிரம் மக்களை மரம் நடும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளது. இதன் மூலமாக காடுகள் அளிக்கப்படும் செயலுக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வரும் 5 வருடத்தில் ஆயிரம் மரம் நடும் திட்டத்தை, அந்நாட்டு அரசு கடந்த 2018 ஆம் வருடத்தில் அமல்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan govt improve tree growth using 63 thousand workers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->