கடும் பொருளாதார நெருக்கடி: வருடாந்திர ராணுவ அணிவகுப்பை ரத்து செய்த பாகிஸ்தான்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்தால் சர்வதேச சந்தையில் பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது. இதற்கு அரசியல் குழப்பம், பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வெளிநாட்டு கடன்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வர தேவையற்ற செலவினங்களை பாகிஸ்தான் தவிர்த்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 1940ல் நிறைவேற்றப்பட்ட லாகூர் தீர்மானத்தை நினைவுகூறும் வகையில் நடத்தப்படும் ராணுவ அணிவகுப்பை ரத்து செய்வதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பொருளாதார நெருக்கடியாலும், சர்வதேச நாணய நிதியம் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுத்து வருவதாலும், இந்த வருட ராணுவ அணிவகுப்பையும், அணிவகுப்பில் அளிக்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan cancels annual military parade due to economic crisis


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->