உக்ரைன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ரஷ்யா படைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் ரஷ்யாவின் மும்முனை தாக்குதலால் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் உக்ரைன் ராணுவத்துக்கு உதவும் விதமாக பல கொரில்லா படைகள் உருவாகி உள்ளன.

இதையடுத்து ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை நிறுத்தும் விதமாக பாலங்கள் மற்றும் ரெயில்பாதைகளை வெடி வைத்து தகர்ப்பது, ரஷ்ய ராணுவ அதிகாரிகளை கொலை செய்வது போன்ற வேலைகளை கொரில்லா படைகளை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் எதிர்ப்புகளால் உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தில், ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்க்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition increases Russian occupied areas in ukraine


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->